திங்கள், 17 நவம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 9 செப்டம்பர் 2025 (10:02 IST)

மகன் சூர்யா நடித்த ஃபீனிக்ஸ் படத் தயாரிப்பாளருக்கு உதவி செய்த விஜய் சேதுபதி!

மகன் சூர்யா நடித்த ஃபீனிக்ஸ் படத் தயாரிப்பாளருக்கு உதவி செய்த விஜய் சேதுபதி!
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கத்தில் ஃபீனிக்ஸ் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படம் கடந்த வாரம் ரிலீஸாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

ஆனால் படத்துக்கு முன்பாக ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் சூயிங் கம் சாப்பிட்டுக் கொண்டே அலட்சியமாக ரசிகர்களோடு பேசி ட்ரோல் மெட்டீரியல் ஆனார் சூர்யா சேதுபதி. இதற்கு முன்பும் ‘நான் வேற அப்பா வேற’ என்று சொன்னதும் ஆறு மாதங்களுக்கு மேல் ட்ரோல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. படம் தியேட்டரில் தோல்வி அடைந்ததால் ஓடிடி மற்றும் சேட்டிலைட் வியாபாரம் ஆகியவை நடக்காமல் முடங்கிக் கிடந்தது.

தற்போது ஓடிடி வியாபாரம் முடிந்து விரைவில் ஸ்ட்ரீம் ஆகவுள்ள நிலையில், தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நஷ்டத்தை சரிகட்ட ‘ஃபீனிக்ஸ்’ படத்தின் சேட்டிலைட் உரிமையை விஜய் சேதுபதி ஒரு கணிசமானத் தொகைக்கு வாங்கிக் கொண்டுள்ளாராம்.