வசனமே இல்லாத விஜய் சேதுபதி படம்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் சேதுபதி மற்றும் அரவிந்த் சுவாமி இணைந்து நடித்துள்ள 'காந்தி டாக்ஸ்' திரைப்படம் வரும் ஜனவரி 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தில் அதிதி ராவ் ஹைதாரி மற்றும் சித்தார்த் ஜாதவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் மிக முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால், இது வசனங்கள் ஏதுமில்லாத ஒரு 'மௌனத் திரைப்படமாக' உருவாக்கப்பட்டுள்ளது. உணர்ச்சிகள் மற்றும் உடல் மொழியின் மூலமே கதையை நகர்த்தும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். வசனங்கள் இல்லாத சூழலில், ரஹ்மானின் இசை இப்படத்தின் முதுகெலும்பாக அமைந்து ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கியுள்ள இத்திரைப்படம், இன்றைய காலகட்டத்திற்கு தேவையான ஒரு டார்க் காமெடி த்ரில்லராக இருக்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Edited by Mahendran
