வெள்ளி, 5 டிசம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 17 அக்டோபர் 2025 (12:12 IST)

தமிழக திரையரங்க விநியோகத்தில் சாதனைப் படைத்த விஜய்யின் ‘ஜனநாயகன்’!

தமிழக திரையரங்க விநியோகத்தில் சாதனைப் படைத்த விஜய்யின் ‘ஜனநாயகன்’!
முழுநேர அரசியல்வாதியாகியுள்ள விஜய் தற்போது ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படத்தின் பின் தயாரிப்புப் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்த படம் ரிலீஸானதும் அவர் சினிமாவை விட்டு முழு நேர அரசியலுக்கு செல்லவுள்ளார். அதனால் படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார். KVN புரொடக்‌ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க முக்கிய வேடங்களில் மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கடந்த ஆண்டு இறுதியில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கிய நிலையில் பெரும்பாலானக் காட்சிகள் சென்னை பனையூரில் உள்ள ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டது. அடுத்த ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தைத் தமிழகத்தில் கைப்பற்ற பெரிய போட்டி நடப்பதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் இப்போது அந்த உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் கைப்பற்றியுள்ளதாக சொல்லப்பட்டது. அவர் இந்த படத்தின் தமிழக விநியோக உரிமையை சுமார் 100 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தொகையாக சொல்லப்படுகிறது. இந்த தொகையைத் தாண்டி அவர் இலாபம் பார்க்க வேண்டுமென்றால் படம் 225 கோடி ரூபாய் அளவுக்கு வசூலிக்க வேண்டும் என சினிமாப் பத்திரிக்கையாளர் ஜெ பிஸ்மி தெரிவித்துள்ளார்.