தொடர்புடைய செய்திகள்
- ஜனநாயகன் படத்திற்கு சென்சார் எப்பதான் கிடைக்கும்!?. எப்பதான் ரிலீஸ்?....
- ஜனநாயகன் ரிலீஸானாலும் லாபம் இல்ல!.. தியேட்டர் அதிபர்கள் அப்செட்!..
- அதே தேதியில் அப்பா படம் ரிலீஸ்!.. சிக்மா ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறதா?!...
- ஜனநாயகனுடன் மோதுகிறாரா சூர்யா?!. விஜய் ஃபேன்ஸ் வச்சு செய்வாங்களே!..
- 13 இடங்களில் கட்!.. ஜனநாயகனுக்கு சென்சார் சான்றிதழ் வந்தாச்சி!.. ரீலீஸ் தேதி இதுவா?..
ஜனநாயகன் ரிலீஸ் தேதி இதுதான்: உறுதி செய்த கனடா விநியோகஸ்தர்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமும், தமிழக அரசியல் களத்தில் மிக முக்கிய ஆளுமையாகவும் விளங்கும் தளபதி விஜய் அவர்களின் 69-வது மற்றும் கடைசித் திரைப்படமான ஜன நாயகன்படத்தின் மீதான எதிர்பார்ப்பு உலகளவில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கடனத பொங்கலுக்கு வெளியாகவிருந்த இந்த படம் தணிக்கை சான்றிதழ் பிரச்சனையால் வெளியாகாமல் இருந்தது. இது விஜய் ரசிகர்களை மிகவும் கவலைக்குள்ளாக்கியது.
இந்த சூழ் நிலையில் ஜன நாயகன் படத்திற்கான தணிக்கை சான்றிதழ் கடந்த வாரம் உறுதியானது. இப்படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து படம் எப்போது வெளியாகும் என பலரும் எதிர்பார்த்துள்ளனர்.
இந்த நிலையில் ஜன நாயகன் ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தின் வெளிநாட்டு உரிமையைக் கைப்பற்றியுள்ள கனடாவின் பிரபல விநியோக நிறுவனமான யோர்க் சினிமாஸ் படம் வருகிற ஜூலை 24-ஆம் தேதி உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது என்பதைத் தங்களது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தள பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.
திரையுலகில் 68 வெற்றிகரமான படங்களை முடித்து, பாக்ஸ் ஆபீஸ் சக்கரவர்த்தியாக வலம் வரும் விஜய், தனது அரசியல் வருகையின் போதே இதுவே தனது கடைசித் திரைப்படம் என்று திட்டவட்டமாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
???? Finally! Our Own Thalapathy Vijay is ready to set the big screen on fire with #JanaNayagan????
— York Cinemas (@yorkcinemas) July 8, 2026
???????? Canada Release by York Cinemas
???? Igniting screens from July 24.
Get ready for the ultimate theatrical celebration.
Stay tuned for tickets ????#thalapathyvijay #yorkcinemas pic.twitter.com/CcyiZAZqUp
