1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. vijay jananayagan 4 days collection

ஜனநாயகன் 4 நாட்கள் வசூல் எவ்வளவு தெரியுமா?

ஜனநாயகன்
தமிழ் திரையுலகில் பல சாதனைகளைப் படைத்து, தற்போது தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்யின் 69-வது மற்றும் கடைசித் திரைப்படமான  ஜன நாயகன்  உலகமெங்கும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த ஜூலை 23-ஆம் தேதி வெளியான இப்படத்தை, அஜித்தை வைத்து  நேர்கொண்ட பார்வை ,  வலிமை ,  துணிவு  என ஹாட்ரிக் படங்களை இயக்கிய இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கியுள்ளார்.  
 
பாலகிருஷ்ணா நடிப்பில் தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற  பகவந்த் கேசரி  திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் இந்த  ஜனநாயகன். விஜய், ஹெச்.வினோத்தை அழைத்து இந்த ரீமேக்கை இயக்கச் சொன்னபோது, அவர் அசல் கதையை அப்படியே எடுக்காமல் தளபதியின் மாஸுக்கும், அவரது தற்போதைய அரசியல் இமேஜுக்கும் ஏற்றவாறு பல அதிரடி மாற்றங்களைச் செய்துள்ளார். விஜய்யின் அரசியல் ஆசைகளையும் நிஜ வாழ்க்கை இலட்சியங்களையும் இணைத்து, தனது ஸ்டைலில் நேர்த்தியாக இப்படத்தை உருவாக்கியுள்ளார் வினோத்.  
 
இந்த நிலையில் ஜன நாயகன் விமர்சன ரீதியாக  கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலில் எவ்வித தொய்வும் இல்லை. கடந்த 4 நாட்களில் உலக அளவில் ரூ.217.48 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.
About Writer
சு. பாலகிருஷ்ணன்
18 ஆண்டுகள் தமிழ் முன்னணி  நாளிதழ்களின் டிஜிட்டல் செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.  அரசியல், பொழுதுபோக்கு செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.  .... Read More
அடுத்த கட்டுரையில்
தலீவரின் ஆசையை நிறைவேற்றும் சுள்ளான்!.. மானமுள்ள தமிழர்கள் உஷா!.. புளுசட்டமாறன் பதிவு...