1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. vijay Jananayagan 13 day collection

13 நாட்களில் ஜன நாயகன் வசூல் எவ்வளவு?

ஜன நாயகன்
தமிழ் சினிமாவில்  சூப்பர் ஸ்டார் விஜய், தனது திரையுலக பயணத்தில் ஏராளமான வெற்றிப் படங்களை வழங்கியுள்ளார். பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும், குஷி, பகவதி, கில்லி, போக்கிரி, துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட பல படங்கள் இன்றும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளன.
 
அரசியலில் நுழைந்து முதல்வராகவும் அமந்துவிட்ட  விஜய், தனது 69-வது திரைப்படமான  ஜன நாயகன்' படத்துடன் சினிமாவுக்கு விடைபெற்றுள்ளார். இதனால் இந்த படத்தின் மீது ஆரம்பத்திலிருந்தே ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.
 
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மமீதா பைஜூ, நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் வெளியான பிறகு ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக, விஜயின் கடைசி திரைப்படம் என்பதால் இன்னும் வலுவான கதை மற்றும் திரைக்கதையுடன் படம் வந்திருக்கலாம் என்ற கருத்தை பல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். விஜயின் மாஸ் இமேஜுக்கு ஏற்ற வகையில் திரைக்கதை அமைக்கப்படவில்லை என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
இருப்பினும், விஜயின் நடிப்பு, ரசிகர்களின் ஆதரவு மற்றும் விடைபெறும் படமாக இருப்பதன் காரணமாக படம் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து வசூலை குவித்து வருகிறது.
 
தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, ஜன நாயகன்  திரைப்படம் உலகம் முழுவதும் வெளியான 13 நாட்களில் ரூ.303.74 கோடி வசூலை ஈட்டியுள்ளது என கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வ வசூல் விவரம் இன்னும் வெளியிடப்படாத நிலையில், இந்த எண்ணிக்கை திரையுலக வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
About Writer
சு. பாலகிருஷ்ணன்
18 ஆண்டுகள் தமிழ் முன்னணி  நாளிதழ்களின் டிஜிட்டல் செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.  அரசியல், பொழுதுபோக்கு செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.  .... Read More
அடுத்த கட்டுரையில்
6 நாட்களில் ரூ.9500 கோடி வசூல்!.. பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் ஸ்பைடர் மேன்!..