அப்பவே சொன்னேன், விஜய் சூப்பர் ஸ்டார்.... மலரும் நினைவில் சரத்குமார்


Mahalakshmi| Last Modified செவ்வாய், 20 ஜனவரி 2015 (09:46 IST)
அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று போட்டி நடத்தி, விஜய்யை அடுத்த சூப்பர் ஸ்டாராக பட்டம் சூட்டியது ஒரு வாரப் பத்திரிகை. அவர்கள் எதிர்பார்த்தது போலவே அது பிரச்சனையாகி பத்திரிகையின் சர்க்குலேஷன் எகிறியது. 

 
அணைந்துபோன அந்தப் பிரச்சனையை மீண்டும் ஊதி பற்ற வைத்தார் சரத்குமார். இது நடந்தது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில்.
 
சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்தவர், சூப்பர் ஸ்டார் என்பது ஒரு பட்டம் கிடையாது. ஒருவர் மறைந்த பிறகும் அவரைப் பற்றி நாம் பேசினால், அவர்தான் சூப்பர் ஸ்டார் என்றார். அத்துடன், விஜய் சூப்பர் ஸ்டாராவார் என சூரியவம்சம் படவிழாவின் போதே அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் சொன்னேன் என்றும் கூறினார். அதாவது விஜய் ஒரு சூப்பர் ஸ்டார் என்பதை சரத்குமார் ஒப்புக் கொண்டுள்ளார்.
 
இறந்த பிறகு காந்தியை மட்டுமில்லை கோட்சேவையும்தான் இந்த சமூகம் பேசுகிறது. அதற்காக அவரை சூப்பர் ஸ்டார் என்று சொல்ல முடியுமா, சுப்ரீம் ஸ்டார்?


இதில் மேலும் படிக்கவும் :