1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. vijay fans will spread negative comments against seyon

சீமான் நடிச்சா விஜய் ஃபேன்ஸ் வச்சி செய்வாங்களே!.. சேயோனுக்கு இருக்கும் சிக்கல்!...

seyon tamil
தாய் கிழவி திரைப்படத்தை இயக்கிய சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் சேயோன் திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிப்பது உறுதியாகியிருக்கிறது. உறவுமுறைகள் குறித்த முக்கியத்துவத்தை பேசும் கதாபாத்திரத்தில் சீமான் நடிக்கவிருக்கிறாராம்.

ஆனால், இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. ஏற்கனவே ஜனநாயகன் படத்தோடு தனது பராசக்தி படத்தை வெளியிட சிவகார்த்திகேயன் முடிவெடுத்ததன் காரணமாக விஜய் ரசிகர்கள் அவர் மீது கோபத்தில் இருக்கிறார்கள். ஒருபக்கம் விஜயின் அரசியலை சீமான் தொடர்ந்து எதிர்த்தும், விமர்சித்தும் பேசி வருகிறார். அதேபோல், தவெகவை எதிர்க்கும் திமுகவின் கூட்டணியில் இருக்கும் கமல்தான் சேயோன் படத்தின் தயாரிப்பாளர்.

எனவே, சேயோன் படத்துக்கு எதிராக கண்டிப்பாக விஜய் ரசிகர்கள் கம்பு சுத்துவார்கள். டிவிட்டரில் இந்த படத்திற்கு எதிராக நெகட்டிவ் விமர்சனங்களை பரப்புவார்கள். இது கண்டிப்பாக படத்தை பாதிக்கும் என கருதப்படுகிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
2026-ல் குறைந்த பட்ஜெட்டில் உருவாகி அதிக லாபத்தை கொடுத்த படங்களின் லிஸ்ட்!...