1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Vijay antony sakthi thirumagan movie release date announced

சிவகார்த்திகேயனுடன் மோதும் விஜய் ஆண்டனி... ‘சக்தி திருமகன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சிவகார்த்திகேயன்
அருவி படத்தின் இமாலய வெற்றி இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் மீது வெளிச்சத்தைக் கொடுத்தது.  அந்த படத்துக்கு பின்னர் இயக்குனர் அவர் இயக்கத்தில் உருவான இரண்டாவது திரைப்படம் வாழ். இந்த படத்தை சிவகார்த்திகேயனின் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்தார். ஆனால் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. படம் அதிகளவில் பிரச்சார தன்மை கொண்டதாகவும் உள்ளீடற்ற ஆன்மீக வாழ்வியல் கதையாக இருந்ததாலும் ரசிகர்களால் ஒதுக்கப்பட்டது.

இதனால் அவரின் அடுத்த படத்தைத் தொடங்குவதில் ஒரு தேக்க நிலை உருவானது. இந்நிலையில் இப்போது அவர் எந்த விளம்பரங்களும் இல்லாமல் தன்னுடைய அடுத்த படத்தை இயக்கியுள்ளார். அந்த படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்து அவரே தயாரித்தும் உள்ளார். இந்த படம் ஒரு ஹெய்ஸ்ட் பின்னணியில் நடக்கும் படம் என சொல்லப்படுகிறது. சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி பெரியளவில் கவனம் ஈர்த்தது.

இந்நிலையில் ‘சக்தி திருமகன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீஸாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அதே நாளில் சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ திரைப்படமும் ரிலீஸாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
பாகுபலி இரண்டு பாகங்களும் ஒரே படமாக… ரிலீஸ் தேதியை அறிவித்த ராஜமௌலி!