வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Updated : சனி, 18 ஜூலை 2015 (10:30 IST)

புலி படத்தில் விஜய், ஸ்ருதியின் டூயட் பாடல்

விஜய் தான் நடிக்கும் படங்களில் பாடுவது வழக்கமானதுதான். ஆனால் டூயட் பாடல் ஒன்றில் அவரும் அவருடன் நடிக்கும் நடிகையும் இணைந்து பாடுவது அபூர்வம்.
தமிழன் படத்தில் இடம்பெற்ற டூயட் பாடலை விஜய்யும், அவருடன் நடித்த ப்ரியங்கா சோப்ராவும் இணைந்து பாடினார். அதன் பிறகு இதுவரை அப்படி ஒரு நிகழ்வு நடைபெற்றதில்லை.
 
புலி படத்தில் விஜய், ஸ்ருதியின் டூயட் பாடல் இடம்பெறுகிறது. இந்தப் பாடலை விஜய்யும், ஸ்ருதியும் இணைந்து பாடியுள்ளனர். படத்தின் நடிக்கும் நாயகன் நாயகியே பாடலையும் பாடுவது எப்போதாவது நடக்கும் அபூர்வம். புலியில் அது நடந்திருக்கிறது.
 
விஜய், ஸ்ருதி, ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் நடித்துள்ள புலி விரைவில் திரைக்கு வரவுள்ளது.