வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 5 செப்டம்பர் 2016 (11:46 IST)

பைரவா... இதுதான் விஜய் படத்தின் பெயர்

பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்துக்கு பைரவா என பெயர் வைத்துள்ளனர். விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
 

 
இன்று விநாயக சதுர்த்தியை முன்னிட்டு படத்தின் பெயரையும், பர்ஸ்ட் லுக்கையும் வெளியிடுவதாக இருந்தனர். ஆனால் நேற்றே படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் லீக் ஆனது. அதனைத் தொடர்ந்து, விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் பெயர் பைரவா என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
 

 
சைக்கிள் ரிக்ஷாவில் கோட் அணிந்து நின்றபடியும், அமர்ந்தபடியும் விஜய் இருக்கும் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வைரலாகி வருகிறது.