1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. vignesh shivan new movie update

நானும் ரவுடிதான் ஸ்டைலில் புதிய படம்!.. களமிறங்கும் விக்னேஷ் சிவன்

nanum rowdythan
நானும் ரவுடிதான் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் முக்கிய இயக்குனராக பார்க்கப்பட்டவர் விக்னேஷ் சிவன். அந்த படத்தில் நடித்த நயன்தாராவையே காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் நானும் ரவுடிதான் படத்திற்கு பின் விக்னேஷ் சிவனுக்கு அப்படி ஒரு வெற்றிப் படம் அமையவில்லை.

சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம், விஜய் சேதுபதியை வைத்து காத்து வாக்குல ரெண்டு காதல், பிரதிப் ரங்கநாதனை வைத்து எல்.ஐ.கே போன்ற திரைப்படங்களை அவர் இயக்கினார். ஆனால் அந்த படங்கள் பெரிய வெற்றியைத் தரவில்லை..

எனவே, தற்போது மீண்டும் நானும் ரவுடிதான் பட ஸ்டைலில் ஒரு கதையை விக்னேஷ் சிவன் உருவாக்கியிருக்கிறாராம். இந்த படத்தில் அரவிந்த்சாமி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் அரவிந்த்சாமியை சந்தித்து அவரின் கதாபாத்திரத்தை சொன்ன போது அவருக்கு மிகவும் பிடித்து போய்விட்டதாம். இப்படி ஒரு கதாபாக்கத்தில் இதுவரை நான் நடித்ததே இல்லை என மிகவும் ஆர்வமாகிவிட்டாராம்..

இந்த படத்தில் ஹீரோவாக பைனலி பரத் நடிப்பதாக சொல்லப்படுகிறது. விக்னேஷ் சிவன், அரவிந்த்சாமி இருவருமே சம்பளம் எதுவும் வாங்காமல் லாபத்தில் பங்கு என்கிற அடிப்படையில் இந்த படத்தை உருவாக்க திட்டமிட்டிருக்கிறார்களாம். இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க நஸ்ரியாவிடம் பேசி வருகிறார்கள். கதாநாயகி முடிவான பிறகு இந்த படம் பற்றிய அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளியாகும் என்கிறார்கள்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
மணிரத்னம் இயக்கத்தில் சூர்யா - தனுஷ்? - புது பட அப்டேட்