தொடர்புடைய செய்திகள்
- சினிமாவில் 8 மணிநேர வேலை…. தீபிகா படுகோன் கருத்துக்கு கீர்த்தி சுரேஷ் ஆதரவு!
- ரசிகர்களைக் கவர்ந்ததா கீர்த்தி சுரேஷின் டார்க் காமெடி ‘ரிவால்வர் ரீட்டா’… முதல் நாள் வசூல் விவரம்!
- டார்க் காமெடி திரைப்படமான ரிவால்வர் ரீட்டா' தேறியதா? கீர்த்தி சுரேஷ் நடிப்பு எப்படி?
- அந்த வார்த்தையை எல்லாம் படத்தில் வைக்க முடியாது… சென்ராயனுக்கு கீர்த்தி சுரேஷ் பதில்!
- சிரஞ்சீவியை விட விஜய்தான் சிறந்த டான்ஸரா?... ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட கீர்த்தி சுரேஷ்!
மெகா கூட்டணியில் அனில் ரவிபுடி! வெங்கி-அனில் 5 மல்டி-ஸ்டாரர் படம் பூஜையுடன் துவக்கம்!
சிரஞ்சீவி மற்றும் நயன்தாரா நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகி, உலகளவில் ரூ. 350 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபீஸை அதிரவைத்த 'மன சங்கர வரபிரசாத் காரு' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, இயக்குனர் அனில் ரவிபுடி தனது அடுத்த மெகா ப்ராஜெக்ட்டை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இத்திரைப்படம் தற்போது தற்காலிகமாக வெங்கிஅனில் 5 என்று அழைக்கப்பட்டு வருகிறது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் இணையும் இந்த தற்காலிகப் பெயரிடப்பட்ட புதிய திரைப்படத்தில், மூத்த நடிகர் வெங்கடேஷ் டக்குபாட்டி மற்றும் ஆக்ஷன் நாயகன் நந்தமுரி கல்யாண் ராம் ஆகிய இருவரும் இணைந்து முதன்முறையாக மல்டி-ஸ்டாரராக நடிக்கின்றனர்.
இவர்களுடன் தென்னிந்தியாவின் முன்னணி நட்சத்திர நாயகிகளான கீர்த்தி சுரேஷ் மற்றும் கிருத்தி ஷெட்டி ஆகியோர் கதாநாயகிகளாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். படத்தில் வெங்கடேஷுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷும், கல்யாண் ராமுக்கு ஜோடியாக கிருத்தி ஷெட்டியும் நடிக்க உள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
வைரலாகும் பூஜை புகைப்படங்கள்: ஹைதராபாத்தில் இன்று நடைபெற்ற பிரம்மாண்டமான பூஜை விழாவுடன் இத்திரைப்படத்தின் பணிகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டன. இந்த விழாவில் தெலுங்கு திரையுலகின் முக்கிய பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். தற்போது இந்த நெகிழ்ச்சியான தருணத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே தீயாய் பரவி வருகின்றன.
படப்பிடிப்பு எப்போது?: படத்தின் வழக்கமான முதற்கட்ட படப்பிடிப்பு வரும் ஜூன் 22, 2026 முதல் துவங்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜி.வி. பிரகாஷ் இசை: குடும்பங்கள் கொண்டாடும் பொழுதுபோக்குத் திரைப்படங்களை தொடர் வெற்றிகளுடன் இயக்கி வரும் அனில் ரவிபுடி, இப்படத்தையும் பக்கா கமர்ஷியல் என்டர்டெய்னராகத் திட்டமிட்டுள்ளார். இதற்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில், தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார். பான்-இந்தியா அளவில் பிஸியாக இருக்கும் இவரது இசை படத்திற்கு மிகப்பெரிய பிளஸ்ஸாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சங்கராந்தி ரிலீஸ் டார்கெட்: படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி முடித்து, வரும் 2027-ஆம் ஆண்டு சங்கராந்தி (பொங்கல்) பண்டிகையை முன்னிட்டு திரைப்படத்தை உலகளவில் பிரம்மாண்டமாகத் திரையரங்குகளில் வெளியிட தயாரிப்பாளர்கள் இலக்கு நிர்ணயித்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
