1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. venkat prabu gifted cm vijay car number board

முதல்வர் விஜய்க்கு வெங்கட்பிரபு கொடுத்த சூப்பர் கிஃப்ட்!.. அப்பவே கணிச்சி சொன்னாரே!...

vijay vp
30 வருடங்களுக்கு மேல் நடிகராக வலம் வந்து ஏராளமான ரசிகர்களை பெற்றவர் விஜய். அதன்பின் அரசியலுக்கு வர ஆசைப்பட்டு தனது ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினார். இவரின் ரசிகர்கள் கடந்த பல வருடங்களாகவே சமூக சேவைகளிலும் அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்தனர்.

இரண்டு வருடங்களுக்கு முன் தைரியமாக முடிவெடுத்து அரசியலுக்கு வந்தார் விஜய். தமிழக வெற்றிக் கழகம் என்று அரசியல் கட்சியை துவங்கி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு தற்போது ஆட்சியை பிடித்திருக்கிறார் விஜய். தற்போது தமிழகத்தின் முதலமைச்சராக மாறிவிட்டார்..

எனவே அவருக்கு பல்வேறு துறைகளில் இருந்தும் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். குறிப்பாக விஜய் முதல்வரானது திரையுலகினருக்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.

இந்நிலையில், இயக்குனர் வெங்கட்பிரபு விஜயை நீலாங்கரையில் உள்ள அவரின் வீட்டில் நேரில் சந்தித்து வாழ்த்து சொல்லியிருக்கிறார். ஏற்கனவே கோட் படத்தில் விஜய் ஓட்டும் காரின் எண் DL 07 PM 2029 என வெங்கட் பிரபு காட்டியிருந்தார்.  தற்போது அது பழித்து விட்டது. தேர்தல் ரிசல்ட் வெளியானபோது பிரேம்ஜி அந்த ஸ்கீரீன்ஷாட்டை பகிர்ந்து ‘அன்றே சொன்னார் வெங்கட்பிரபு’ என பதிவிட்டிருந்தார்.
vijay vp

இந்நிலையில்தான், முதல்வர் விஜயி நேரில் சந்தித்த வெங்கட் பிரபு அந்த நேம் போர்ட்டையே அவருக்கு பரிசாக கொடுத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது..
அடுத்த கட்டுரையில்
விஜய்க்கு நேரில் சென்று வாழ்த்து சொன்ன பிரசாந்த்!.. கோட் டீம் ரீ யூனியன்!...