1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. venkat prabu doing movie with old gang

எஸ்.கே. படம் டிராப்!.. மீண்டும் தன்னுடைய கேங்கை வைத்து படமெடுக்கும் விபி!...

venkat prabu
சென்னை 28 திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் வெங்கட் பிரபு. அதன்பின் சரோஜா, கோவா, மங்காத்தா, மாநாடு உள்ளிட்ட சில படங்களை இயக்கினார். அதில் மாநாடு மற்றும் மங்காத்தா ஆகிஅ இரண்டு படங்களும் சூப்பர் ஹிட் அடித்தது.

விஜயை வைத்து கோட் என்கிற திரைப்படத்தை இயக்கினார் வெங்கட் பிரபு. இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த படத்திற்கு பின் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்கமும் முயற்சியில் வெங்கட் பிரபு ஈடுபட்டார். ஆனால் 2 வருடங்கள் ஆகியும் அது நடக்கவில்லை.

இந்த படத்திற்காக சிவகார்த்திகேயனை அமெரிக்காவெல்லாம் கூட்டி சென்றார். ஆனால், படம் டேக் ஆப் ஆகவில்லை. இந்நிலையில், ஜெய், மிர்ச்சி சிவா போன்ற தனது நட்பு வட்டாரத்த்தில் இருப்பவர்களை வைத்து குறைவான பட்ஜெட்டில் ஒரு புதிய படத்தை இயக்க வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளாராம். இந்த படத்தை ட்ரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் என்கிற நிறுவனம் தயாரிக்க உள்ளது..

ஜெய், மிர்ச்சி சிவா போன்றவர்கள் ஏற்கனவே சென்னை 28, சென்னை 28 -II, பார்ட்டி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்கள்.
அடுத்த கட்டுரையில்
பாக்யராஜ் படத்துக்கு விருது கொடுக்காமல் தவிர்த்த எம்.ஜி.ஆர்!. காரணம் இதுதான்!...