போங்கடா நான் பழைய ரூட்டுக்கே போறேன்!.. மீண்டும் கோவா ஸ்டைலில் படமெடுக்கும் விபி!...
சென்னை 28 திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக களமிறங்கியவர் வெங்கட் பிரபு. அதன்பின் சரோஜா, கோவா, மங்காத்தா உள்ளிட்ட சில படங்களை இயக்கினார். வெங்கட் பிரபுவுக்கென ஒரு தனி நண்பர்கள் வட்டாரம் இருக்கிறது.
அவரின் சகோதரர் பிரேம்ஜி, மிர்ச்சி சிவா, ஜெய், வைபவ் ஆகியோரை வைத்து தொடர்ந்து சின்ன பட்ஜெட்டில் படங்களை எடுப்பார். அதே டீமை வைத்து சென்னை 28 இரண்டாம் பாகத்தையும் அவர் எடுத்திருந்தார். விஜயை வைத்து கோட் படத்தை இயக்கிய பின் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கம் முயற்சியில் வெங்கட்பிரபு ஈடுபட்டார்.
ஆனால் அது நடக்கவில்லை. எனவே பெரிய நடிகரின் பின்னால் சென்று நேரத்தை வீண்டிப்பதை மீண்டும் சின்ன பட்ஜெட்டில் தன்னுடைய நண்பர்கள் வட்டாரத்தை வைத்து கோவா பட ஸ்டைலில் ஒரு புதிய படத்தை இயக்க அவர் திட்டமிட்டிருக்கிறாராம். அனேகமாக இந்த படத்தில் அவரின் தம்பி பிரேம்ஜி, மெர்சி சிவா, ஜெய், வைபவ் உள்ளிட்ட பலரும் நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.