தொடர்புடைய செய்திகள்
- முதல்வர் விஜய்க்கு வெங்கட்பிரபு கொடுத்த சூப்பர் கிஃப்ட்!.. அப்பவே கணிச்சி சொன்னாரே!...
- ஆண்டவன் கைவிடமாட்டான்!..நல்லதே நடக்கும்.. வெங்கட் பிரபு டிவிட்!..
- மாரி செல்வராஜ் - இளையராஜா இணையும் மஞ்சணத்தி- வெளியானது பர்ட்ஸ் லுக் போஸ்டர்
- சாய் அபயங்கருக்கும் காரை பரிசளித்த சூர்யா!.. ஆர்.ஜே.பாலாஜிக்கு என்ன?...
- கருப்பு சூப்பர் ஹிட்!.. ஒளிப்பதிவாளருக்கு சூர்யா கொடுத்த சூப்பர் கிஃப்ட்!..
எந்த ஹீரோவும் சிக்கலயே!.. யார வச்சி படமெடுக்க?!.. நொந்துபோன வெங்கட்பிரபு!...
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து உருவான கோட் திரைப்படம் ரிலீஸாகி ஒன்றரை வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் இப்போது வரை வெங்கட் பிரபுவின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகவில்லை. சிவகார்த்திகேயனை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கும் முயற்சியில் வெங்கட் பிரபு ஈடுபட்டிருந்தார்.
அந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பாக இருந்தது. ஆனால் பட்ஜெட் அதிகமாக இருந்ததால் தயாரிப்பு நிறுவனம் பின்வாங்கியது. இது நடக்காது என்பது தெரிந்த பின் பிரதீப் ரங்கநாதனை அணுகியிருக்கிறார் வெங்கட் பிரபு. அவரோ முழு கதையை (பவுண்டட் ஸ்கிரிப்ட்) கொடுங்கள். படிச்சு பார்த்துட்டு சொல்கிறேன் எனக் கூற அதிர்ச்சி அடைந்தார் விபி. அடுத்து கென் கருணாசை அணுகியிருக்கிறார். அவரும் முழு கதையை கொடுங்கள்.. படிச்சிட்டு சொல்றேன். என சொல்லை விபி ஜெர்க் ஆகிவிட்டாராம்..
வெங்கட் பிரபுவை பொருத்தவரை முழுக் கதையும் தயார் செய்து கொண்டு படப்பிடிப்புக்கு செல்லும் பழக்கமே கிடையாது. ஆனாலும் வேறு வழியில்லாமல் டம்மியாக பவுண்டட் ஸ்கிரிப்ட் தயார் செய்து தயாரிப்பாளரிடம் சென்று இந்த படத்தை ஆறு மாதங்களுக்குள் முடித்து விடுகிறேன்.. அதுவரை செலவுக்கு மாதம் 50 லட்ச ரூபாய் கொடுத்து விடுங்கள் என்று கேட்டிருக்கிறார்.. இதை கேட்ட தயாரிப்பு நிறுவனம் நீங்கள் படம் பண்ணவே வேண்டாம் என சொல்லிவிட்டதாக சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
