வெள்ளிமூங்கா ரீமேக்கில் சுந்தர் சி. ஜோடி பூனம் பஜ்வா


Ashok| Last Modified புதன், 10 பிப்ரவரி 2016 (20:24 IST)
மலையாளத்தில் வெற்றி பெற்ற வெள்ளிமூங்கா படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை சுந்தர் சி வாங்கியிருந்தார். இந்தப் படத்தின் நாயகனின் வயது கதைப்படி 40 -க்கும் மேல் என்பதால் நாயகனாக சுந்தர் சி.யே நடிக்க உள்ளார்.

 
 
மார்ச்சில் தொடங்கயிருக்கும் இந்த ரீமேக்கில் சுந்தர் சி ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடிப்பதாக முதலில் கூறப்பட்டது. இப்போது பூனம் பஜ்வாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். சுந்தர் சி.யின் உதவி இயக்குனர் வெங்கட் இந்த ரீமேக்கை இயக்குகிறார்.
 
சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சுந்தர் சி.யின் படத்தில் பூனம் பஜ்வா சுந்தர் சி.யின் ஜோடியாக சின்ன வேடத்தில் நடித்திருந்தது முக்கியமானது.


இதில் மேலும் படிக்கவும் :