வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வியாழன், 27 அக்டோபர் 2016 (15:50 IST)

வீரசிவாஜி முதலில் வரும் - விக்ரம் பிரபு தகவல்

விக்ரம் பிரபு நடித்துள்ள வீரசிவாஜி ஒரு மாதத்துக்கு முன்பே வெளியாவதாக இருந்தது. ஆனால், அதன் வெளியீட்டை திடீரென்று தள்ளி வைத்தனர்.
 
தற்போது நெருப்புடா, முடிசூடா மன்னன் ஆகிய படங்களில் அவர் நடித்துவரும் நிலையில், எந்தப் படம் முதலில் வெளிவரும் என்ற குழப்பம் நிலவியது. அதற்கு விக்ரம் பிரபு விளக்கம் அளித்துள்ளார்.
 
நவம்பர் மாதம் வீரசிவாஜி திரைக்கு வரும் என்றும், அடுத்து முடிசூடா மன்னன், அதையடுத்து நெருப்புடா படங்கள் வெளிவரும் என அவர் கூறினார். 
 
நெருப்புடா படத்தை அவர் தயாரித்து, நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.