வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Caston
Last Modified: புதன், 18 நவம்பர் 2015 (14:19 IST)

100 கோடியை கடந்த வேதாளம் - அதிகாரப்பூர்வமாக அறிவித்த வில்லன் நடிகர்

வேதாளம் படம் 8 நாள்களில் 100 கோடியை கடந்ததாக அப்படத்தில் வில்லனாக நடித்த ராகுல் தேவ் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.


 
 
தமிழகத்தில் கொட்டித் தீர்த்த மழையிலும், ரசிகர்கள் வேதாளம் திரையரங்குகளுக்கு படையெடுத்தனர். முதல்நாளில் 15.5 கோடிகளை படம் தமிழகத்தில் வசூலித்ததாக கணக்கு கூறப்பட்டது. எனினும், ஒருவாரம் கழித்தே படத்தின் வசூல் நிலவரத்தை கூற முடியும் என்றார், படத்தை தயாரித்த ஏ.எம்.ரத்னம்.
 
இந்நிலையில், வேதாளம் படத்தில் வில்லனாக நடித்த ராகுல் தேவ், தனது ட்விட்டரில், வேதாளம் 100 கோடி கிளப்பில் இணைந்துவிட்டது, இது அதிகாரப்பூர்வமான தகவல் என குறிப்பிட்டுள்ளார்.