வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Modified: செவ்வாய், 7 ஜூன் 2016 (18:54 IST)

மம்முட்டி இளமை ரகசியம் அறிய வரலட்சுமி ஆர்வம்

மம்முட்டியின் இளமை ரகசியம் குறித்து அவரிடமே நடிகை வரலட்சுமி கேட்டுள்ளார்.
 

 

 
மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி அன்று முதல் இன்று வரை இளைமை தோற்றதுடனே காணப்படுகிறார். இன்னும் சிறிது காலத்தில் துல்கர் சல்மானும் மம்முட்டியும் சகோதரர்கள் போல் காட்சி அளிக்கவும் வாய்ப்பு உள்ளது.
 
மம்முட்டியின் இளமை குறித்து ஏற்கனவே பாலிவுட் நடிகை கரீனா கபூர், இதுவரை எந்த நடிகரும் இவரை போல் இளமையுடனும், கட்டுக்கோப்பான உடல் அமைப்புடனும் இருந்தது இல்லை, பாலிவுட் நடிகர்கள் கூட தங்கள் உடலை மம்முட்டி போல் வைத்து கொள்ள முடியவில்லை, என்று கூறியிருந்தார்.
 
தற்போது கசாபா என்ற மலையாள படத்தில் மம்முட்டியுடன் நடித்து வரும் வரலட்சுமி, படப்பிடிப்பில் மம்முட்டியில் இளமை தோற்றமும், சுறுசுறுப்பும் கண்டு அசந்து போய் உள்ளார். இதனால் அவரின் இளமை ரகசியத்தை அவரிடம் கேட்டுள்ளார்.
 
அதற்கு மம்முட்டி, ரகசியம் என்பதே யாருக்கும் சொல்லக்கூடாது, அப்படி சொல்லிவிட்டால் அது ரகசியமே கிடையாது, என்று கூறியுள்ளார். இதனால் வரலட்சுமி ஏமாற்றம் அடைந்துள்ளார்.