வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinojkiyan
Last Updated : புதன், 16 அக்டோபர் 2019 (21:47 IST)

வரதட்சனை என்ற எண்ணம் வரக்கூடாது .... பிரபல இயக்குநருக்கு டுவிட் !

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குநராகக் கருதப்படுவர் சீனுராமசாமி. இவர் இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று, கூடல் நகர், நீர்பறவைகள், தர்மதுரை, கண்ணே கலைமானே ஆகிய படங்கள் கிராமத்து மக்களின் எதார்த்த வாழ்க்கைப் படம் பிடித்தது.
இந்நிலையில் தற்போது அவர் மாமனிதன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை யுவன்சங்கர் ராஜா மற்றும் இளையராஜா இருவரும் தயாரித்து இசையமைத்து வருகிறார்கள். இப்படத்தின் நாயகனாக நடிகர் விஜய் சேதுபடி நடிக்கிறார்.
 
இந்நிலையில் ராம் குமார் என்பவர்,தனது டுவிட்டர் பகக்த்தில், என் திருமணத்தின் வரதட்சணை வாங்க கூடாது என்ற எண்ணம் வரவைத்தா இயக்குனர் ஐயா க்கு  பிறந்த நாள் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
 
இதற்கு இயக்குநர் சீனுராமசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி என பதிவிட்டுள்ளார். இன்று இயக்குநர் சீனுராமசாமிக்கு பிறந்தநால் என்பதால் அவருக்கு ராம்குமார் இவ்வாறு வாழ்த்து கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. அவர் இயக்கிய படத்தின் மூலமாக வரதட்சனை வாங்கக்கூடாது என்ற முடிவெடுத்ததாகவும் இருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகிறது.