தீயாய் எழுந்து நின்றாய்.. காற்றாய் பயணமுற்றாய்: ஸ்டாலினுக்கு வைரமுத்து கவிதை மழை!

vairamuthu
தீயாய் எழுந்து நின்றாய்.. காற்றாய் பயணமுற்றாய்: ஸ்டாலினுக்கு வைரமுத்து கவிதை மழை
siva| Last Modified திங்கள், 3 மே 2021 (18:29 IST)
திமுக தலைவர் மு க ஸ்டாலின் இன்னும் ஒரு சில நாட்களில் தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளார். முதல் முதலாக அவர் முதல்வர் பதவியை ஏற்க உள்ளதை அடுத்து பல பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

அந்த வகையில் ஸ்டாலினின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரும் கவிஞருமான வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து கவிதை ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த கவிதையில் அவர் கூறியிருப்பதாவது


கலைஞர் திருமகனே!
கண்ணுக்கு இனியவனே
நிலம் போல் பொறுமை கண்டாய்!
நீர் போல் இனிமை கொண்டாய்!
தீயாய் எழுந்து நின்றாய்..
காற்றாய் பயணமுற்றாய்...
அதனால்தான்வான்போல் வளர்ந்து நிற்கிறாய்
உன்வெற்றி புறவழிப்பட்டது அல்ல...
அறவழிப்பட்டது
அதனால்தான் நினைவிடத்தில் நிமிர்ந்து உட்கார்ந்து
கண்ணாடி கழற்றி கண் துடைக்கிறார் கலைஞர்
இனி இனமொழியை மீட்டெடுக்கும் உனது கரம்!
எழுதுகோலில் பாட்டெடுக்கும் எமது குலம்!!
இவ்வாறு வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதில் மேலும் படிக்கவும் :