அந்த எலியை அடிச்சு கொல்லுங்கடா


Mahalakshmi| Last Modified சனி, 11 ஏப்ரல் 2015 (13:10 IST)
ஜெய்சங்கர் படங்களில் பயங்கர கொள்ளைக் கூட்டங்கள் இடம்பெறும். அப்படியொரு கொள்ளைக் கூட்டத்தைப் பிடிக்க, அவர்களில் ஒருவராக இரண்டற கலக்கிறார் நல்லவரான வடிவேலு.
 
 
தங்களை கருவறுக்க தங்கள் கூட்டத்திலேயே ஒருவன் நுழைந்தால், அவனை எலி என்பார்கள். அந்த எலியைப் பிடிச்சு அடிச்சுக் கொல்லுங்கடா என்பார்களில்லையா? அந்த எலியாக வடிவேலு நடித்திருக்கிறார்.
 
அவர் அந்தக் கொள்ளைக் கூட்டத்தில் மாட்டிக் கொண்டு முழிப்பதும், அவர்களை எப்படி தந்திரத்தால் பிடிக்கிறார் என்பதும்தான் எலி படத்தின் கதை என்றார், படத்தை இயக்கும் யுவராஜ்.
 
கொஞ்சம் புராதன நெடி அடிக்கும் கதை என்பதால், 1960 -களில் கதை நடப்பது போல் எடுத்து வருகிறார்கள். தற்போது சென்னை பின்னி மில்லில் பிரமாண்ட அரங்கு அமைத்து படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :