வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Caston
Last Modified: செவ்வாய், 8 மார்ச் 2016 (10:03 IST)

அரசியலா...? - எலி நடிகரின் கிலி

அரசியலா...? - எலி நடிகரின் கிலி

2011 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதராவாக பிரச்சாரம் மேற்கொண்ட வடிவேலு, போன இடமெல்லாம் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற விஜயகாந்தை குறி வைத்து தாக்கினார். அவரது கிண்டல் பிரச்சாரத்துக்கு நிறைய லைக்குகள் விழுந்தன. ஆனால், திமுக தோல்வியடைய அதிமுக வெற்றி பெற்றது. அதன் பிறகு சினிமாவில் நடிக்க முடியாமல் வடிவேலு அடைந்த துன்பங்கள் சொல்லி மாளாது.


 
 
எலி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், அரசியல் கடையை மூடித்தான் வச்சிருக்கேன், எப்போ வேணா திறக்கலாம் என்று கூறியிருந்தார். இப்போது தேர்தல் நேரம், கடையை திறப்பாரா வடிவேலு?
 
அதிமுக பக்கமிருந்து வடிவேலுக்கு அழைப்பு வந்துள்ளது. ஆனால், அமைதியாக அதனை மறுத்துள்ளார். திமுக பக்கம்? சென்றமுறை வடிவேலு கழுவி ஊற்றிய விஜயகாந்துடன் கூட்டணி வைக்க முழு மூச்சாக இறங்கியுள்ளது திமுக. இதுதான் வடிவேலை கடுமையாக பாதித்துள்ளது. அவர் எப்படி மீண்டும் திமுகவுக்கு பிரச்சாரம் பண்ண முடியும்? இல்லை எப்படிதான் மனம் ஒப்புக் கொள்ளும்?
 
இந்த தேர்தலை பொறுத்தவரை சைலண்ட் மோடில் இருப்பதே சாலச்சிறந்தது என்று முடிவு செய்துள்ளார் வடிவேலு.