ஞாயிறு, 7 டிசம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 12 ஜூலை 2025 (10:58 IST)

அல்ஸீமர் நோயாளி வடிவேலு… ஆட்டையப் போடத் துடிக்கும் பஹத்… இதுதான் ‘மாரீசன்’ படக் கதையா?

அல்ஸீமர் நோயாளி வடிவேலு… ஆட்டையப் போடத் துடிக்கும் பஹத்… இதுதான் ‘மாரீசன்’ படக் கதையா?
மாமன்னன் படத்த்தின் வெற்றிக் கூட்டணியான பகத் பாஸில் மற்றும் வடிவேலு  மீண்டும் இணைந்து மாரீசன் என்ற படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்குனர் சுதேஷ் சங்கர் என்பவர் இயக்கி வருகிறார். சூப்பர் குட் பிலிம்ஸ் இந்த படத்தைத் தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் கடந்த ஆண்டு நடந்து முடிந்த நிலையில் தற்போது பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன.

சமீபத்தில் இந்த படத்தின் டீசர் ஒன்று வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றது. இதையடுத்து தற்போது படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 25 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் கதை குறித்து இயக்குனர் சுதீஷ் பேசியுள்ளார்.

அதன்படி “அல்ஸீமர் நோயாளியான வடிவேலு ஏடிஎம்-ல் பணம் எடுக்கும் போது அதை பெட்டித் திருடனான பஹத் பார்த்துவிடுகிறார். அவரிடம் இருந்து பணத்தைத் திருட அவரோடு திருநெல்வேலியில் இருந்து திருவண்ணாமலை வரை செய்யும் பயணம்தான் ‘மாரீசன்’ எனக் கூறியுள்ளார்.