கமல் படத்துடன் மோதும் ரஜினி மகளின் படம்


Mahalakshmi| Last Modified சனி, 11 ஏப்ரல் 2015 (12:32 IST)
உத்தம வில்லன் மே 1 வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவித்து, விளம்பரமும் செய்து வருகின்றனர். அதே மே 1 தனது, வை ராஜா வை படம் வெளியாகும் என ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
 
 
வை ராஜா வை படத்தில் கௌதம் கார்த்திக் நடித்துள்ளார். சூதாட்டத்தை மையமாக வைத்து படம் தயாராகியுள்ளது. யுவன் இசை.
 
இந்த மாதம் பாடல்களை வெளியிட்டு மே 1 படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். உத்தம வில்லன் மே 1 வெளியாகிறது என்ற அறிவிப்புக்குப் பிறகு, தனது படமும் மே 1 வெளியாகும் என ஐஸ்வர்யா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
 
தில்தான்.


இதில் மேலும் படிக்கவும் :