1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. uriyadi actor vijaykumar will act in dhanush next movie

தனுஷின் புதிய படத்தில் உறியடி நடிகர்!.. செம அப்டேட்!..

dhanush
நடிகர் தனுஷ் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஓம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடியவிருக்கிறது.

விரைவில் லப்பர் பந்து பட இயக்குனர் தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறார். இந்த படம் ஒரு கிராமத்து கதை என சொல்லப்படுகிறது. ஒரு கிராமத்தில் எப்போதும் கோயிலிலேயே இருப்பாராம் தனுஷ். எதனால் அவர் எப்போதும் கோவிலிலேயே இருக்கிறார்.. அதற்கான காரணம் என்ன என்பதுதான் படத்தின் கதை என சொல்லப்படுகிறது.

இந்நிலையில்தான் இந்த படத்தில் உறியடி நடிகர் விஜய் குமார் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகியிருக்கிறாது. அதேநேரம் இந்த படத்தின் கதாநாயகி யார் என்பது தற்போது வரை முடிவாகவில்லை. கதாநாயகிக்கு கனமான வேடம் என்பதால் தமிழ் முகமுள்ள அதேநேரம் நடிப்பு திறமையுள்ள ஒரு நடிகையை இயக்குனர் தேடி வருகிறாராம்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ஒரு உண்மை கதை!.. வெங்கி அட்லூரி லீக் பண்ணிட்டாரே!..