வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வியாழன், 8 செப்டம்பர் 2016 (13:05 IST)

உதயநிதி, பார்த்திபன், சூரி... உதயமாகும் புதுக்கூட்டணி

உதயநிதி, பார்த்திபன், சூரி... உதயமாகும் புதுக்கூட்டணி

உதயநிதி எழில் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். கௌரவ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். அதற்கு முன் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் அவர் நடிக்கிறார். செப்டம்பர் 19 -ஆம் தேதி அப்படம் தொடங்குகிறது.


 
 
பொன்ராமின் உதவியாளரான தளபதி பிரபு இந்தப் படத்தை இயக்க, உதயநிதியுடன் பார்த்திபன், சூரி ஆகியோர் நடிக்கின்றனர். உதயநிதி, பார்த்திபன் இணைந்து நடிக்கும் முதல்படம் இது. நாயகி, நிவேதா.
 
பார்த்திபன் - வடிவேலு நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களிடையே பிரபலம். பார்த்திபன் - சூரி காம்பினேஷன் அதே அளவுக்கு கலகலப்பூட்டுமா?
 
பொறுத்திருந்து பார்ப்போம்.