ரஜினி முருகனுக்கு யு - விநாயகர் சதுர்த்தி அன்று வருகிறார்கள்


லெனின் அகத்தியநாடன்| Last Modified புதன், 9 செப்டம்பர் 2015 (19:39 IST)
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள, ரஜினி முருகன் படத்துக்கு, அனைவரும் பார்க்கத் தகுந்த யு சான்றிதழ் தந்துள்ளது தணிக்கைக்குழு.
 
 
சின்ன படங்கள் வெளியாக திருப்பிதி பிரதர்ஸை நம்பியிருந்தனர். அவர்கள் வாங்கி வெளியிட்டால் படம் ஓடும் என்ற நம்பிக்கை. உத்தம வில்லன் அனைத்தையும் தலைகீழாக்கியது. திருப்பதி பிரதர்ஸ் இப்போது ரஜினி முருகனை நம்பியுள்ளது. இந்தப் படம் ஓடினால்தான் வாழ்வே.
 
வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை இயக்கி பொன்ராம் ரஜினி முருகனை இயக்கியுள்ளார். வாலிபர் சங்கத்தில் நடித்த சிவகார்த்திகேயன், சூரி என்று அதேடீம். யு சான்றிதழ் கிடைத்து, வரிச்சலுகை வாங்கினால், அனைத்து தடைகளையும் தாண்டிவிடலாம் என்று நம்பியிருந்தது திருப்பதி பிரதர்ஸ். அதேபோல் யு சான்றிதழ் கிடைத்துள்ளது.
 
செப்டம்பர் 17 ரஜினி முருகன் திரைக்கு வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :