செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: சனி, 12 டிசம்பர் 2015 (18:33 IST)

கிறிஸ்துமஸ் போட்டியில் துல்கர் சல்மான்

தமிழகத்தை போல் இல்லாமல் கேரளாவில் கிறிஸ்துமஸ் தினத்தில் முக்கியமான திரைப்படங்கள் வெளியாகும். இந்தமுறை மூன்று முக்கியமான படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகும் என கூறப்படுகிறது. 


 
 
டிசம்பர் 18 -ஆம் தேதி துல்கர் சல்மான் நடித்துள்ள சார்லி வெளியாகிறது. அதனுடன் போட்டியிடுவது, திலீப் நடித்துள்ள 2 ஸ்டேட்ஸ்.
 
கிறிஸ்மஸுக்கு வெளியாவதாக இருந்த மம்முட்டியின், புதிய நியமம் ஜனவரி மாதத்துக்கு தள்ளிப் போயுள்ளது.