இறுதிக்கட்டத்தில் சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்'


sivalingam| Last Modified வியாழன், 18 மே 2017 (06:42 IST)
சூர்யா நடிப்பில் ஹரி இயக்கிய 'சிங்கம் 3 திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் சூர்யா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'தானா சேர்ந்த கூட்டம்' என்ற படத்தில் நடித்து வருகிறார்


 


இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்புடன் நடந்த நிலையில் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்க உள்ளது. இந்த படப்பிடிப்பு 15 நாட்கள் நடைபெறும் என்றும் அத்துடன் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைய உள்ளதாகவும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.

சூர்யா, கீர்த்திசுரேஷ், செந்தில், சரண்யா பொன்வண்ணன், ரம்யா கிருஷ்ணன், கோவை சரளா, கே.எஸ்.ரவிகுமார், ஆனந்த்ராஜ், ஆர்ஜே பாலாஜி, சுரேஷ்மேனன், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் இவ்வருட இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :