பன்றி காய்ச்சல் பயம் - தடுப்பூசி போட்டுக் கொண்ட த்ரிஷா

Mahalakshmi| Last Modified வியாழன், 5 மார்ச் 2015 (10:09 IST)
அப்பாடக்கர் படப்பிடிப்பின் போது நடிகை த்ரிஷாவும், ஜெயம் ரவியும் மாஸ்க் அணிந்திருக்கும் புகைப்படங்கள் சில தினங்கள் முன்பு வெளியாயின. இந்தப் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்திலும் த்ரிஷா வெளியிட்டிருந்தார். பன்றி காய்ச்சல் பீதி காரணமாக அவர்கள் மாஸ்க் அணிந்திருந்தனர்.
இந்நிலையில் பன்றி காய்ச்சல் வராமலிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக த்ரிஷா தடுப்பூசி போட்டுக் கொண்டார். அந்தப் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

தனக்கு பன்றி காய்ச்சல் இல்லை என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :