வியாழன், 12 மார்ச் 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வெள்ளி, 13 பிப்ரவரி 2026 (11:56 IST)

42 ஆண்டுகள் கழித்து வெளியாகும் டி ராஜேந்தரின் சூப்பர்ஹிட் படம்.. நாளை ரிலீஸ்..!

42 ஆண்டுகள் கழித்து வெளியாகும் டி ராஜேந்தரின் சூப்பர்ஹிட் படம்.. நாளை ரிலீஸ்..!
இயக்குநர் டி.ராஜேந்தரின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான மைல்கல்லான 'உயிருள்ளவரை உஷா' திரைப்படம், சுமார் 42 ஆண்டுகள் கழித்து மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 
 
1983-ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம், டி.ராஜேந்தர் இயக்கி, கதாநாயகனாக நடித்ததோடு மட்டுமல்லாமல் கதை, திரைக்கதை, வசனம், இசை மற்றும் ஒளிப்பதிவு எனப் பன்முக திறமையுடன் அவரே உருவாக்கிய காவியமாகும். இந்த படத்தில் ராதாரவி, நளினி, சரிதா, வெண்ணிற ஆடை மூர்த்தி உள்ளிட்டோர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 
இந்த படம் அக்காலத்தில் மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்ததோடு, இன்றும் ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்டில் உள்ளன. தற்போது நாளை  காதலர் தினத்தை முன்னிட்டு, டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இந்தப் படம் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. 
 
இந்த செய்தியை அவரது மகன் நடிகர் சிலம்பரசன் தனது சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். 40 ஆண்டுகளை கடந்தாலும் மாறாத அதே உணர்வுடன் பழைய நினைவுகளை திரையில் காண டி.ஆர் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
 
Edited by Siva