1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 28 அக்டோபர் 2015 (17:27 IST)

இன்று இரவு வெளியாகிறது ’வேதாளம்’ படத்தின் ட்ரெய்லர்

’தல’ அஜீத்குமார், ஸ்ருதிஹாசன் நடிப்பில் தயாராகியிருக்கும் படம் ‘வேதாளம்’.
 
இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று இரவு வெளியாகிறது.  இந்த ட்ரெய்லர் 2 நிமிடம் 35 விநாடிகள் ஓடக்கூடியதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 
ஏற்கனவே, வெளியாகிய வேதாளம் படத்தின் டீஸர் 50 இலட்சத்தை தாண்டி சாதனை படைத்துள்ளது. இந்த படத்தில் அஜீத்தின் தங்கையாக லட்சுமி மேனன் நடித்துள்ளார். சிறுத்தை, வீரம் ஆகிய படங்களை இயக்கிய சிவா இந்த படத்தை இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.
 
பைக், கார் பிரியரான அஜீத் சமீபகாலமாக நடித்துள்ள படங்களில் பைக் ஓட்டும் காட்சி இடம்பெற்று வருகிறது. அந்த வரிசையில், வேதாளம் திரைப்படத்தில் 1198 சிசி அளவுள்ள ஸ்போர்ட்ஸ் பைக்கான ’டுகாட்டி 1199 பனிகெல்’ பைக் ஓட்டும் காட்சி ரசிகர்களுக்கு விருந்தளிப்பதாக இருக்கும். 
 
மேலும், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஆலுமா டோலுமா’ பாடல் தமிழகம் எங்கும் கலக்கிக் கொண்டிருக்கிறது. அதுபோல ‘தெறிக்க விடலாமா’ என்ற வசனமும் பிரபலமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.