செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 17 நவம்பர் 2025 (15:44 IST)

கௌரவ ஆஸ்கர் விருதைப் பெற்ற ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ்!

கௌரவ ஆஸ்கர் விருதைப் பெற்ற ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ்!
ஹாலிவுட்டில் கடந்த 40 ஆண்டுகளாக முன்னணி நடிகராக இருந்து வருபவர் டாம் க்ரூஸ். தொடக்கத்தில் அனைத்து விதமானப் படங்களிலும் நடித்து வந்த டாம் க்ரூஸ் தற்போது ஆக்‌ஷன் படங்களில் மட்டும் அதிகளவில் நடித்து வருகிறார்.

டாம் க்ரூஸ் நடித்து தொடர்ந்து வெளியாகி வரும் பட வரிசை ‘மிஷன் இம்பாசிபிள்’. 1996ல் மிஷன் இம்பாசிபிள் முதல் பாகம் வெளியான நிலையில் இதுவரை மொத்தம் 6 பாகங்கள் இந்த படவரிசையில் வெளியாகியுள்ளது.  அனைத்து பாகங்களுமே ஆக்‌ஷன் பட பிரியர்களுக்கு புல் மீல்ஸ் விருந்தாக அமைந்தது. சமீபத்தில் வெளியான கடைசி பாகத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் சில்லிட வைக்கும் அளவுக்கு அமைந்தன. இந்த படத்தின் ஆக்‌ஷன் காட்சிக்காக அவர் கின்னஸ் சாதனையில் இடம்பிடித்தார்.

இந்நிலையில் ஹாலிவுட் சினிமாவுக்கு அளித்தப் பங்களிப்புக்காக டாம் க்ரூஸுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று அவரிடம் அந்த விருதை அளித்துள்ளனர்.