ஞாயிறு, 16 நவம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth K
Last Modified: வியாழன், 30 அக்டோபர் 2025 (15:18 IST)

இன்னைக்கு ஃபுல்லா வாட்டர்மெலன் ஜூஸ்தான்! எல்லை மீறும் திவாகர்! Biggboss Season 9

Watermelon diwakar

பிக்பாஸ் வீட்டில் அடுத்த வாரம் வைல்ட் கார்ட் எண்ட்ரி நடக்க உள்ள பரபரப்பு ஒரு பக்கம் இருக்க, வீட்டில் உள்ள எல்லாரிடமும் சண்டை போடுவதில் பார்வதியை மிஞ்சி முன்னணியில் நிற்கிறார் வாட்டர்மெலன் திவாகர்.

 

முன்பெல்லாம் பிக்பாஸ் ப்ரோமோ வந்தாலே விஜே பாரு கத்திக் கொண்டிருக்கும் வீடியோவாக வருகிறது என குறைப்பட்டுக் கொண்ட ஆடியன்ஸுக்கு இன்று வந்த மூன்று ப்ரோமோவும் வாட்டர்மெலன் திவாகரின் சண்டையாக வந்து சேர்ந்துள்ளது.

 

தராதரம் இல்லாதவர் என ரம்யா ஜோவை திட்டுவது, சாப்பாட்டில் சீப்பாக நடந்துக் கொள்வதாக சொல்லி சபரியை கோபப்படுத்தியது, கம்ருதீனுடன் ஏற்கனவே உள்ள சண்டை என திவாகர் லிமிட் தாண்டி போய்க் கொண்டிருக்கிறார். இதனால் ஹவுஸ்மேட்ஸே திவாகரிடம் பேசுவதை குறைத்துக் கொண்டுள்ளனர்.

 

இந்நிலையில் இன்றைய டாஸ்க்கில் விக்கல்ஸ் விக்ரம், எஃப்ஜேவை திட்டி பேசியுள்ளார் திவாகர். கடந்த இரண்டு நாட்களில் இதுவரை இல்லாத அளவு ஹவுஸ்மேட்ஸின் வெறுப்பை சம்பாதித்துள்ள திவாகர் இன்னமுமே கூட தன் கருத்தை மாற்றிக் கொள்ளாமல் எல்லாரையும் தகுதியில்லாதவர்கள் என பேசி வருவது ஆடியன்ஸுக்கும் கோபத்தை அளிப்பதாக தெரிகிறது. இந்த வார இறுதியில் இதை விஜய் சேதுபதி கேட்டு கண்டிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K