வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Ashok
Last Modified: புதன், 4 நவம்பர் 2015 (16:34 IST)

திருப்பதியில் நகைச்சுவை நடிகர் சந்தானம் நடிகை ஆஷ்னா சவேரியுடன் ரகசிய திருமணம்?

நடிகர் சந்தானம், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் ஆகிய படங்களில் நாயகியாக நடித்த நடிகை அஷ்னா சவேரியை 2 வது திருமணம் செய்து கொண்டதாகவும் இருவரும் திருப்பதியில் திருமணம் செய்து, மணக்கோலத்தில் கோவிலில் சாமி தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது.

 
இந்நிலையில், இரண்டு பேரும் திருப்பதி கோவில் அருகே ஜோடியாக நடந்து வருவது போல் புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. 
 
ஆனால், இந்த தகவலை சந்தானம் தரப்பில் மறுத்துள்ளனர். இந்த தகவல் குறித்து நடிகர் சந்தானம் உதவியாளரிடம் கேட்டபோது, இது நடிகர் சந்தானம் நாயகனாக நடிக்கும் அடுத்த படத்திற்கு பூஜை செய்வதற்காக அங்கு படக்குழுவினர் சென்றுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் இது குறித்து அவரிடம் கேட்டபோது "நவம்பர் 15ஆம் தேதி முதல் நடிகர் சந்தானம் நாயகனாக நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. அதனால் எப்போதுமே நாயகனாக ஒரு படம் ஆரம்பிக்கும் முன்பு திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்வது அவரின் வழக்கம், அதனால் ’இனிமே இப்படித்தான்’ படக்குழுவினர் 14 பேரும் திருப்பதிக்கு சென்றுள்ளனர்.

அந்த குழுவில், நடிகை ஆஷ்னா சவேரியும் அவரது தாயாரும் உடன் இருந்தனர். இருவருக்கும் காதலும் இல்லை. கல்யாணமும் நடக்கவில்லை, தயவு செய்து இப்படி வதந்தியை பரப்ப வேண்டாம், இது தவறான தகவல் என்று அவர் கூறினார்.