1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Suresh
Last Updated : சனி, 12 செப்டம்பர் 2015 (14:45 IST)

திப்பு சுல்தான் வேடத்தில் ரஜினியா? மதவெறியை தூண்டும் இந்து முன்னணி

கன்னட தயாரிப்பாளர் அசோக் கெனி, திப்பு சுல்தானின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்க முயற்சித்து வருகிறார்.
 
திப்பு சுல்தான் வேடத்தில் ரஜினி நடித்தால் சிறப்பாக இருக்கும் என அவர் பேட்டியொன்றில் தெரிவித்தார். ரஜினி தரப்பிலிருந்து இதற்கு இதுவரை பதில் தரப்படவில்லை.
 
ரஜினி திப்பு சுல்தான் படத்தில் நடிக்கப் போவதில்லை என்பது சின்ன குழந்தைக்கும் தெரியும். அப்படியிருந்தும், ரஜினியை முன்னிறுத்தி மதவெறியை கக்கியிருக்கிறது, இந்து முன்னணி.

இது குறித்து இந்து அடிப்படைவாதியும், இந்து முன்னணி தலைவருமான ராமகோபாலன் மதவெறி கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
 
"திப்பு சுல்தான் வேடத்தில் தமிழ் நடிகர்கள் நடிப்பது தமிழர்களை அவமானப்படுத்துவதற்கு சமம். திப்பு சுல்தான் தமிழர்களுக்கும் குறிப்பாக இந்துக்களுக்கு எதிராக நடத்திய தாக்குதல்கள் பற்றி பல வரலாற்று புத்தகங்களில் இருந்து அடையாளம் காட்ட முடியும். 
 
தமிழர்களை துரத்தியடித்த திப்பு சுல்தானை சிறந்த சுதந்திர போராட்ட தியாகியாக சித்தரிப்பதற்கான முயற்சிதான் இந்த பட தயாரிப்பு. முன்னாள் முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆரின் மூதாதையர்கள் கொங்கு நாட்டில் உள்ள பொள்ளாச்சியை சேர்ந்தவர்கள்.
 
அந்த பகுதி மைசூர் சமஸ்தானத்தில் ஐதர் அலி ஆளுகையில் இருந்த போது இந்துக்களை மதம் மாறும்படி கட்டாயப்படுத்தினார்கள். மதம் மாற விருப்பம் இல்லாதவர்கள் அங்கிருந்து பாலக்காட்டுக்கு குடி பெயர்ந்தனர். அவ்வாறு குடி பெயர்ந்தவர்களில் எம்.ஜி.ஆரின் மூதாதையர்களும் அடங்குவர்.
 
எனவே எனது வேண்டுகோள் தமிழையும், தமிழரையும் நேசிப்பவர்கள் யாரும் திப்பு சுல்தான் வேடத்தில் நடிக்க கூடாது. அந்த படத்தை தமிழகத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம்." - இவ்வாறு ராமகோபாலன் கூறினார்.