திடீரென கேரளா சென்ற ரஜினிகாந்த்.. அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் என்ன நடக்குது?
திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது பிரம்மாண்ட வெற்றி திரைப்படமான 'ஜெயிலர்' படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பிற்காக இன்று கேரளா சென்றடைந்தார்.
கொச்சியில் தரையிறங்கிய அவர், அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் ஜனவரி 20 முதல் நடைபெறவுள்ள இரண்டு நாள் படப்பிடிப்பில் பங்கேற்கிறார். இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில், ரஜினிகாந்த் மீண்டும் 'டைகர்' முத்துவேல் பாண்டியனாக அதிரடி காட்டவுள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த 2025 மார்ச் மாதம் தொடங்கிய நிலையில், பிப்ரவரி மாதத்திற்குள் முழு படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்த இரண்டாம் பாகத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கௌரவ தோற்றத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். இதுமட்டுமன்றி, பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் மற்றும் கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஆகியோரும் சிறப்பு தோற்றத்தில் வரக்கூடும் என்ற வதந்திகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
Edited by Siva
