ஆஸ்திரேலியா வரை சென்ற விஜய்யின் பிறந்த நாள் கொண்டாட்டம்: தமிழண்டா.....


sivalingam| Last Modified செவ்வாய், 6 ஜூன் 2017 (22:21 IST)
 ஒரு தமிழ் நடிகரின் பிறந்த நாள் என்றால் தமிழகம் முழுவதும் கொண்டாடுவார்கள், மிஞ்சி போனால் பக்கத்து மாநிலங்களில் கொண்டாடுவார்கள் என்றுதான் இதுவரை நாம் பார்த்துள்ளோம். ஆனால் இளையதளபதி விஜய்யின் இந்த வருட பிறந்த நாளை உலகின் பல நாடுகளில் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது விஜய் ரசிகர்களுக்கு மட்டுமின்றி ஒரு தமிழனாக அனைவருக்கும் பெருமை என்று கூறப்படுகிறது.


 


விஜய்யின் பிறந்த நாள் வரும் ஜூன் 22ஆம் தேதி கொண்டாடப்பட்டவுள்ள நிலையில் அன்றைய தினத்தில் சென்னை உள்பட பல முன்னணி நகரங்களில் விஜய் நடித்த சூப்பர் ஹிட் படங்கள் திரையிடப்படவுள்ளன.

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் திரையரங்கில் விஜய் பிறந்த நாள் அன்று 'துப்பாக்கி' படம் திரையிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் கொண்டாடப்படவுள்ளதை அடுத்து ஐரோப்பாவில் பல நாடுகளில் விஜய் படங்கள் திரையிட பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் இதுகுறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :