வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 26 ஜூன் 2015 (20:41 IST)

விஜய் ரசிகர்களுக்கு இந்தப் படம் திருவிழாவாக இருக்கும் - இயக்குனர் அட்லி

ராஜா ராணி என்ற மிகப்பெரிய ஹிட்டுடன் இயக்குனரான அட்லி அடுத்தப் படத்திலேயே விஜய்யை இயக்குகிறார்.

இன்று அதன் பூஜை சென்னையில் நடந்தது. சத்ரியன் படத்தின் அதிகாரப்பூர்வ தழுவல் இப்படம் என கூறப்படுகிறது.
 

 
அட்லியின் முதல் படம் ரொமான்டிக் காமெடி என்பதால் விஜய்யை வைத்து அவர் என்ன மாதிரி படத்தை எடுக்கப் போகிறார் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
 
இன்று படம் குறித்து மீடியாவிடம் பேசிய அட்லி,
 
"நான் விஜய் சாரோட ஃபேன். விஜய் சாரோட ஃபேன் அவரை வச்சு ஒரு படம் பண்ணுனா எப்படியிருக்குமோ அப்படி இந்தப் படம் இருக்கும். கம்ப்ளீட் ஃபேமிலி என்டர்டெயின்மெண்ட். ஒருகாலத்துல எம்.ஜி.ஆர். சார், ரஜினிகாந்த் சார் படங்களைப் பார்க்கிற போது ஒரு கம்ப்ளீட்னெஸ் இருக்கும்.
 
அந்த மாதிரி இதில் எல்லாமே இருக்கும். எமோஷன்ஸ் இருக்கும் ஃபேமிலி இருக்கும் ஃபேமிலி வேல்யூ இருக்கும். பெண்களுக்கும், ஃபேமிலி ஆடியன்ஸுக்கும் படம் ரொம்பப் பிடிக்கும். முக்கியமாக விஜய் சாரோட ஃபேன்ஸுக்கு இதுவொரு திருவிழாவாகவே இருக்கும்" என்றார்.