1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. this week ott series and movie release update

இந்த வார OTT ரிலீஸ் திரைப்படங்கள் என்னென்ன? - வாங்க பார்ப்போம்!..

drishyam
கொரோனா காலத்தில் தியேட்டர்கள் மூடியிருந்த போது அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், ஹாட் ஸ்டார், Zee5 போன்ற ஓடிடி நிறுவனங்கள் தலை தூக்க ஆரம்பித்தன. நடிகர் சூர்யா கூட தனது ஜெய்பீம் மற்றும் சூரரைப் போற்று ஆகிய திரைப்படங்களை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிட்டார்.

அதன்பின் புதிய திரைப்படங்கள் 3 வாரங்களுக்கு பின் ஓடிடியில் வெளியாகி வருகிறது. ஓடிடி மூலம் தயாரிப்பாளர்களுக்கு கணிசமான வருமானமும் கிடைக்கிறது. இன்னும் சொல்லப்போனால் ஒரு படத்தின் வியாபாரத்தையும், ரிலீஸ் தேதியையும் கூட ஓடிடி நிறுவனங்கள்தான் நிர்ணயிக்கும் நிலை தற்போது ஏற்பட்டிருக்கிறது.

திரைப்படங்கள் மட்டுமின்றி பல புதிய வெப் சீரியஸ்களும் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாகின்றன. அந்த வகையில் ஜூன் 19ஆம் தேதியான நாளை ஓடிடியில் என்னென்ன திரைப்படங்கள் மற்றும் வெப் சீரியஸ் வெளியாகிறது என்பதை பற்றி பார்ப்போம்.

தமிழை பொறுத்தவரை கிணத்த கானோம் திரைப்படம் Hotstar தளத்தில் வெளியாகிறது. அதேபோல், மோகன்லால் நடிப்பில் வெளியான மலையாள திரைப்படமான திரிஷ்யம் 3 அமேசான் பிரைமில் நாளை வெளியாகிறது. அதேபோல் Aashaan திரைப்படம் சன் நெக்ஸ்ட்டிலும், GU திரைப்படம் ManoramaMax-லும் வெளியாகிறது. தெலுங்கில் Constable என்கிற படம் Aha தளத்தில் வெளியாகிறது. இது போக நிறைய ஆங்கில மற்றும் கொரியன் வெப் சீரியஸ்கள் மற்றும் திரைப்படங்களும் நாளை ஓடிடி தளங்களில் நாளை வெளியாகவுள்ளது.
அடுத்த கட்டுரையில்
D55: தனுஷ் - ராஜ்குமார் பெரியசாமி இணையும் ஓம்!.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் செம மாஸ்!...