திருட்டு பயலே 2 - பாபி சிம்ஹா, பிரசன்னா நடிக்கின்றனர்

திருட்டு பயலே 2 - பாபி சிம்ஹா, பிரசன்னா நடிக்கின்றனர்


Sasikala| Last Updated: வெள்ளி, 19 ஆகஸ்ட் 2016 (16:27 IST)
சுசி கணேசனின் திருட்டு பயலே படத்தை தயாரித்த கல்பாத்தி எஸ்.அகோரம் அப்படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கிறார். சுசீ கணேசனே இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார்.

 
 
2009 -இல் கந்தசாமி படத்தை இயக்கி சுசி கணேசன், திருட்டு பயலே படத்தை இந்தியில் ரீமேக் செய்தார். ஷார்ட்கட் ரோமியோ என்ற பெயரில் வெளியான அந்தப் படம் பரவலான வரவேற்பை பெற்றது. ஆனால், அடுத்து படம் கிடைக்கவில்லை சுசிக்கு. 
 
மீண்டும் தமிழுக்கு வந்திருப்பவர் திருட்டு பயலே இரண்டாம் பாகத்தை எடுக்கிறார். இதில் ஜீவன் நடித்த எதிர்நாயகன் வேடத்தை பாபி சிம்ஹா செய்ய, அப்பாஸின் வில்லன் வேடத்தை செய்கிறார் பிரசன்னா. 

செப்டம்பரில் படப்பிடிப்பு தொடங்குகிறது.


இதில் மேலும் படிக்கவும் :