கொஞ்சம் கூட மாறவே இல்லை; சிவகார்த்திகேயனை பற்றி பிரபல நடிகை

Sasikala| Last Updated: புதன், 28 ஜூன் 2017 (16:12 IST)
சிவகார்த்திகேயன் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து தமிழ்த் திரைப்பட நடிகரும் ஆவார். இவர் பசங்க  திரைப்படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமான மெரினாவில் கதாநாயகனாகத் தனது திரையுலக வாழ்வைத் துவங்கினார்.

 
மிக குறைந்த காலகட்டத்தில் மிக உயர்ந்த இடத்தை பிடித்தவர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயனின் வளர்ச்சி என்பது  சாதாரண விஷயம் கிடையாது. ஆரம்பத்தில் இருந்து அவர் நிறைய கஷ்டங்களை தாண்டி தான் இந்த இடத்திற்கு  வந்திருக்கிறார்.
 
நடிகை ரெஜினா அண்மையில் சிவகார்த்திகேயனை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். சிவகார்த்திகேயனை ஆரம்பத்தில் இருந்து பார்க்கிறேன். அப்போ எப்படி இருந்தாரோ, அப்படித்தான் இப்பவும் இருக்கார். கொஞ்சம் கூட மாறவே இல்லை. அவர் படப்பிடிப்பு தளத்தில் இருந்தால் நாம் சிரிச்சுச் சிரிச்சு வயிறு வலிக்கும் என்று கூறியுள்ளார். கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படத்தில் ரெஜினா சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :