ஸ்பைடர்மேன் பாக்கப்போனா ஜனநாயகன் ஓடுது!.. சென்னை கேசினோ தியேட்டரில் குளறுபடி..
விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகனின் திரைப்படம் கடந்த மாதம் 23ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது. படம் வெளியாகி 10 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் சென்னை உட்பட தமிழகத்தில் பல ஊர்களிலும் ஜனநாயகன் திரைப்படம் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் Spider Man New Brand Day திரைப்படம் கடந்த 30ம் தேதி உலகமெங்கும் வெளியானது.
இந்நிலையில்தான், சென்னையில் ஸ்பைடர் மேன் படம் பார்க்க சென்ற ரசிகர்களை தியேட்டர் நிர்வாகம் ஜனநாயகன் படத்தை பார்க்க சொன்னதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
சென்னை அண்ணா சாலையில் உள்ள கேசினோ திரையரங்கில் இன்று காலை 11:30 மணிக்கு ஸ்பைடர் மேன் படம் பார்ப்பதற்காக பலரும் டிக்கெட் புக் செய்திருக்கிறார்கள். ஆனால் இரவு 11:30 மணி என்பதற்கு பதிலாக காலை 11 மணி என தவறுதால காட்டிவிட்டது என்று தியேட்டர் நிர்வாகம் ரசிகர்களிடம் கூறியது.
இதனால் கோபமடைந்த ரசிகர்கள் பணத்தை திருப்பி கொடுங்கள் என கேட்டதற்கு பணத்தை திருப்பி கொடுக்க முடியாது.. வேண்டுமானால் ஜனநாயகன் படத்தை பாருங்கள் என தியேட்டர் நிர்வாகம் கூறியிருக்கிறது. இதனால் அங்கிருந்த ரசிகர்கள் தியேட்டர் நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.