வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: செவ்வாய், 4 ஜூலை 2017 (12:35 IST)

இரண்டாவது நாளாகத் தொடரும் தியேட்டர் ஸ்டிரைக்

நேற்று நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், இன்றும் தியேட்டர் ஸ்டிரைக் தொடர்கிறது.



 
ஜி.எஸ்.டி. வரி மற்றும் தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் வரி இரண்டும் தமிழ் சினிமாவை பாதிப்பதாகக் கூறி, நேற்று முதல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர் திரையரங்க உரிமையாளர்கள். இதனால், தமிழ்நாடு முழுவதும் உள்ள 1000 திரையரங்குகள் நேற்று மூடப்பட்டன.

இந்நிலையில், தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால், திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சில அமைச்சர்களை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், இரண்டாவது நாளாக இன்றும் ஸ்டிரைக் தொடர்கிறது. இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையிலாவது சுமூக முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.