பிரமாண்டமாக தயாராகும் கபாலி வெற்றி விழா - ரஜினி பச்சைக் கொடி

பிரமாண்டமாக தயாராகும் கபாலி வெற்றி விழா - ரஜினி பச்சைக் கொடி


Sasikala| Last Modified புதன், 3 ஆகஸ்ட் 2016 (11:51 IST)
கபாலி படத்தின் வெற்றியை பிரமாண்ட விழா எடுத்து கொண்டாட தயாராகி வருகிறார் தாணு. அதனை ரஜினியே தெரிவித்தார்.

 
 
தனியார் தொலைக்காட்சி நடத்திய கபாலி குறித்த நிகழ்ச்சியில் ரஜினி தொலைபேசி வாயிலாக பேசினார். 
 
அப்போது பேசிய அவர், தயாரிப்பாளர் தாணு ஒரு பிரமாண்ட விழாவுக்கு தயாராகி வருகிறார். இதுவரை அவருடைய கையை கட்டிப் போட்டிருந்தேன். இனிமேலும் அப்படி செய்ய மாட்டேன் என்று கூறினார்.
 
தாணு நடத்தவிருக்கும் பிரமாண்ட வெற்றி விழாவுக்கு ரஜினி பச்சைக் கொடி காட்டியிருப்பதை ரஜினியின் தொலைபேசி உரையாடல் உறுதி செய்கிறது.
 


இதில் மேலும் படிக்கவும் :