1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By K.N.Vadivel
Last Modified: சனி, 14 நவம்பர் 2015 (04:46 IST)

நடிகர் தனுஷ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நடிகர் சங்கத் தலைவர் நாசரிடம் புகார்

நடிகர் தனுஷ் மீது நடிகர் சங்கத்தில் தமிழ்நாடு கேபிள் டி.வி. உரிமையாளர்கள் சங்கத்தினர் புகார் அளித்தனர்.
 

 
இது குறித்து, தமிழ்நாடு கேபிள் டி.வி. உரிமையாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் காயல் இளவரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:–
 
கடந்த சில நாட்களுக்கு முன்பு, நடிகர் தனுஷ் நடித்த விளம்பர படம் ஒன்று வெளியாயனது. அதில், கேபிள் டி.வி. ஆபரேட்டர்களை இழிவுபடுத்தி நடித்துள்ளார். இதனால் தமிழகம் முழுவதிலும் உள்ள சுமார் 40 ஆயிரம் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மனம் மிகவும் வேதனை அடைந்துள்ளது.
 
எனவே, கேபிள் டிவி ஆப்பரேட்டர்களை இழிவுபடுத்தி பேசி நடித்த நடிகர் தனுஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சங்க மாநில பொதுச் செயலாளர் தஞ்சை ஜீவா, இணைச் செயலாளர் ஜீ.ஆர்.கதிரவன் ஆகியோர்  தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசரை சந்தித்து புகார் அளித்துள்ளோம். எங்கள் புகார் மீது உரிய நவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறோம் என அதில் தெரிவித்துள்ளார்.