வியாழன், 12 மார்ச் 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By BALA
Last Modified: வெள்ளி, 13 பிப்ரவரி 2026 (12:00 IST)

சூர்யா மீது எழுந்த அந்த விமர்சனம்! விஜய் மாதிரியே வெறி கொண்டெழுந்த சூர்யா

சூர்யா மீது எழுந்த அந்த விமர்சனம்! விஜய் மாதிரியே வெறி கொண்டெழுந்த சூர்யா
தற்போது கோலிவுட்டில் ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சூர்யா. ஆனால் ஆரம்பத்தில் இவருக்கு நடிக்க தெரியாது. டான்ஸ் ஆட தெரியாது. சண்டை காட்சிகளிலும் நடிக்க தெரியாது. சிவக்குமாரே சூர்யாவை எப்படி இவன் சினிமாவில் வரப்போகிறான்? எப்படி ஜெயிக்கப் போகிறான் என்றுதான் பயந்து கொண்டு இருந்தார். நேருக்கு நேர்படத்தில் முதன் முதலாக அவர் ஹீரோவாக அறிமுகமானார்.
 
ஆனால் அந்த படத்தில் முதலில் நடித்தது அஜித். சில பல காரணங்களால் அஜித் அந்த படத்தில் இருந்து விலக சூர்யா கமிட்டானார். அந்த படத்தில் அவள் வருவாளா பாடலில் சூர்யா அந்த அளவுக்கு நடனம் ஆடி இருக்க மாட்டார். ஆனால் அவருடைய அந்த முதல் படத்தில் உள்ள நடனத்தை பார்த்து கல்கி பத்திரிக்கையில் மிக கடுமையாக விமர்சனங்களை எழுதி இருந்தனர்.
 
இனிமேல் சூர்யாவை எந்த படத்திலும் நடனம் ஆடி பார்க்கக் கூடாது என்று விமர்சனம் எழுதியிருக்கின்றனர். இது சூர்யாவை மிகவும் பாதித்திருக்கிறது. அதன்பிறகு பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் சென்யோரிட்டா பாடலில் அவர் மிகவும் க்யூட்டாக நடனமாடி இருப்பார். அதே கல்கி பத்திரிக்கை நாங்கள் அன்று எழுதியதை வாபஸ் வாங்கிக் கொள்கிறோம் என மீண்டும் எழுதியிருந்தனர்.
 
சூர்யாவை பொறுத்த வரைக்கும் அந்த ஒரு விமர்சனம் அவரை பெரிதும் பாதித்ததனால் ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் டான்ஸ் ஆடி பழகிக் கொண்டே இருந்தார். அவர் ஒன்றை நினைத்து விட்டால் அதை அடையும்வரை பின்வாங்க மாட்டார். மிகவும் வெறிபிடித்த மனிதர். அந்த ஒரு உழைப்பு தான் இன்று அவரை இந்த அளவுக்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது.
 
ஜீன்ஸ் பேண்ட் நனையும் வரை ஒரு நாளைக்கு டான்ஸ் ஆடுவார் என்று இந்த தகவலை சிவக்குமார் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார். இதே மாதிரி தான் நாளைய தீர்ப்பு படத்தில் விஜய் முதன் முதலாக ஹீரோவாக அறிமுகமானதும் அவருடைய தோற்றத்தை கிண்டல் செய்து பத்திரிகைகளில் விமர்சனங்கள் வந்தன. அந்த ஒரு பக்கத்தை மட்டும் கிழித்து வைத்துக்கொண்டு அதை தினமும் பார்த்து பார்த்து தன்னை ஒரு மாஸ் ஹீரோவாக மாற்றியவர் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.